நியூசிலாந்துக்கு எதிரான 2வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி. டிரா செய்தது பாகிஸ்தான்.

pak vs newzelandநியுசிலாந்து மற்றும் பாகிஸ்தான்  நாடுகளுக்கு இடையே நேற்று முடிவடைந்த 2வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி டிரா ஆனது.

முதல் டெஸ்ட் போட்டியில் 248 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை அபாரமாக தோற்கடித்த பாகிஸ்தான் அணி கடந்த 17ஆம் தேதி ஆரம்பமான இரண்டாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் உற்சாகத்துடன் களமிறங்கியது., டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.

முதல் இன்னிங்சில் தொடக்க ஆட்டக்காரர் லாத்தமின் அதிரடி ஆட்டத்தால் நியூசிலாந்து அணி 156 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 406 ரன்கள் குவித்தது. மெக்கல்லம், கிரேக் ஆகியோர் தலா 43 ரன்கள் எடுத்தனர். பாகிஸ்தான் தரப்பில் ஜல்விகார் பாபர் 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

முதல் இன்னிங்ஸில் பதிலடி கொடுக்க களமிறங்கிய பாகிஸ்தான் அணி  147 ஓவர்களில் 393 ரன்கள் எடுத்தது.

இதனால் முதல் இன்னிங்ஸில் 13 ரன்கள் முன்னணியில் இருந்த நியூசிலாந்து இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்து விளையாடி 64.5 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 250 ரன்கள் எடுத்த போது டிக்ளேர் செய்தது.

இதனால் 264 ரன்கள் எடுத்தால் வெற்றி இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் 67 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டம் முடிவடைந்ததால் போட்டி டிரா என அறிவிக்கப்பட்டது.

நியூசிலாந்து அணியின் டெய்லர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

Leave a Reply