உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்றைய ஆட்டத்தில் நியூசிலாந்து அணி ஸ்காட்லாந்தி அணியை திக்கி திணறி வெற்றி பெற்றுள்ளது.
டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பீல்டிங் செய்ய தீர்மானித்தது. இதனால் முதலில் பேட்டிங் செய்த ஸ்காட்லாந்து அணி 36.2 ஓவர்களில் 142 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
143 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை விரட்டிய நியுசிலாந்து அணியின் முக்கிய பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆகி வந்தனர். இருப்பினும் 24.5 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 146 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
நியூசிலாந்து அணியின் பெளல்ட் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.