நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர். இலங்கை படுதோல்வி
இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வந்த இரண்டாவது கிரிக்கெட் டெஸ்ட் தொடரில் இலங்கை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதனால் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த தொடரை இலங்கை அணி 0-2 என்ற கணக்கில் இழந்தது.
கடந்த 18ஆம் தேதி ஆரம்பமான 2வது கிரிக்கெட் டெஸ்ட் தொடரில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால் முதலாவதாக பேட்டிங் செய்த இலங்கை அணி 80.1 ஓவர்களில் 292 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. மாத்யூஸ் 77 ரன்களும், சிறிவர்தனா 62 ரன்களும் எடுத்தனர்.
இந்நிலையில் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய நியூசிலாந்து அணி,237 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் 25 ரன்கள் முன்னிலையில் இருந்த இலங்கை அணி 2வது இன்னிங்ஸில் படுசொதப்பலாக விளையாடி 133 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. மெண்டிஸ் மட்டும் ஓரளவுக்கு நிலைத்து ஆடி 46 ரன்கள் எடுத்தார். இதனால் வெற்றி பெற 189 ரன்களே தேவை என்ற நிலையில் விளையாடிய நியூசிலாந்து, 54.3 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கள் இழந்த நிலையில் 189 ரன்கள் வெற்றி பெற்றது.
ஆட்டநாயகனாக நியூசிலாந்து வீரர் வில்லியம்சன் தேர்வு செய்யப்பட்டார்.