பிரிட்டிஷார் காலத்தில் இருந்த நியூசிலாந்து தேசிய கொடியில் மாற்றம் கொண்டு வர வேண்டி நாடு முழுவதும் 2016ஆம் ஆண்டு வாக்கெடுப்பு நடத்தப்படும் என அந்நாட்டு பிரதமர் ஜான் கீ நேற்று தெரிவித்துள்ளார்.
பிரிட்டிஷாரிடம் அடிமையாக இருந்தபோது உள்ள தேசியக்கொடியை நீக்கிவிட்டு, முற்றிலும் கருப்புப் பின்னணியில் வெள்ளி நிற பரணி இலை பொறிக்கப்பட்ட கொடியை, புதிய தேசியக் கொடியாக்க வேண்டும் என தமது அரசு விரும்புவதாகவும், இதுகுறித்து பொதுமக்களின் கருத்தை கேட்பதற்காக வரும் 2016 ஆம் ஆண்டு பொதுவாக்கெடுப்பு நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஒரு நாட்டின் தேசியக்கொடி என்பது நாட்டின் அடையாள சின்னம். நமது நவீனத்துவம், சுதந்திரம் ஆகியவற்றை வெளிப்படுத்தும் விதமாக அதன் வடிவத்தில் மாற்றம் கொண்டு வருவது குறித்து முடிவெடுக்க இதுவே சரியான தருணம்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேசியக்கொடியில் மாற்றம் கொண்டு வர நியூசிலாந்து எதிர்க்கட்சியும் விருப்பம் தெரிவித்துள்ளது.