ஜல்லிக்கட்டுக்கு எதிராக மேனகா காந்தி வழக்கு தொடர்ந்தாரா? அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழக அரசும் மத்திய அரசும் இணைந்து அவசர சட்டம் இயற்றியுள்ள நிலையில் ஜல்லிக்கட்டுக்கான பிரச்சனை கிட்டத்தட்ட முடிந்துவிட்டதாக கருதப்படுகிறது. அவசர சட்டத்தை எதிர்த்து யாராவது வழக்கு தொடர்ந்தாலும், தமிழக அரசு கேவியட் மனு தாக்கல் செய்திருப்பதால் உடனடியாக நீதிமன்றம் தடை வழங்காது.
இந்நிலையில் மத்திய அமைச்சர் மேனகா காந்தி ஜல்லிக்கட்டுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளதாக இணையதளங்களிலும் ஒரு சில தொலைக்காட்சிகளிலும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.
இந்நிலையில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் இதுகுறித்து தன்னுடைய டுவிட்டரில் விளக்கம் கொடுத்துள்ளார். சற்று முன்னர் மேனகா காந்தியிடம் தான் தொலைபேசியில் பேசியதாகவும், ஜல்லிக்கட்டுக்கு எதிராக சுப்ரீம்கோர்ட்டில் தான் எந்த மனுவையும் தாக்கல் செய்யவில்லை என்று அவர் கூறியதாகவும் பதிவு செய்துள்ளார். இதன்மூலம் ஊடகங்களில் வெளியாகி வருவது வதந்தியே என்பது நிரூபணம் ஆகியுள்ளது.