உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி. பாகிஸ்தானுக்கு 2வது தோல்வி
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் ஏற்கனவே இந்திய அணியிடம் தோல்வி அடைந்த பாகிஸ்தான் அணி நேற்றைய போட்டியில் நியூசிலாந்து அணியிடம் 22 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
மொகாலியில் நேற்று நடந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அந்த அனி 5 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 180 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர் குப்தில் 48 பந்துகளில் 80 ரன்கள் எடுத்தார்.
181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 158 ரன்கள் மட்டுமே எடுத்ததால் 22 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வ் இஅடைந்தது. குப்தில் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
நாளை ஆப்கானிஸ்தான் – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயும், இந்தியா-வங்கதேசம் அணிகளுக்கு இடையேயும் ஆன போட்டிகள் நடைபெறும்.