உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் கடைசி காலிறுதி போட்டி இன்று மேற்கிந்திய தீவுகள் மற்றும் நியூசிலாந்து நாடுகளுக்கு இடையே வெல்லிங்டன் நகரில் நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
தொடக்க ஆட்டகாரராக களமிறங்கிய குப்தில் மிக அபாரமாக விளையாடி 11 சிக்சர்கள் மற்றும் 24 பவுண்டரிகளுடன் 237 ரன்கள் எடுத்து பிரமாதமான தொடக்கத்தை கொடுத்தார். இறுதியில் நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 393 ரன்கள் எடுத்தது. டெய்லர் 42 ரன்களும், வில்லியம்சன் 33 ரன்களும் எடுத்தனர்.
வெற்றி பெற 394 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற இமாலய இலக்கை நோக்கிய விளையாடிய மேற்கிந்திய தீவுகள் அணி, 30.3 ஓவர்களில் 250 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து தோல்வி அடைந்தது. மேற்கிந்திய தீவுகளின் கெய்லே 61 ரன்களும், கார்ட்டர் 32 ரன்களும், சாமுவேல் மற்றும் ஷம்மி தலா 27 ரன்களும், ஹோல்டர் 40 ரன்களும் எடுத்தனர். இதனால் நியூசிலாந்து அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது. அந்த அணி தென்னாப்பிரிக்க அணியுடன் வரும் 24ஆம் தேதி அரையிறுதியில் மோதுகிறது.
237 ரன்கள் எடுத்த நியூசிலாந்து வீரர் குப்தில் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.