வில்லியம்சன், டெய்லர் அபார சதம்: டிரா ஆகும் ஹாமில்டன் டெஸ்ட்
நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையே ஹாமில்டனில் நவம்பர் 29 முதல் நடைபெற்று வரும் இரண்டாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி இன்றுடன் முடிவடையவுள்ளது
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 375 ரன்கள் குவித்தது. லாதம் சதமடித்தார். மிச்செல், டெய்லர், வாட்லிங் ஆகியோர் அரைசதம் அடித்தனர். இதனையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 476 ரன்கள் குவித்தது. ரூட் 226 ரன்களும் பர்ன்ஸ் 101 ரன்களும் போப் 75 ரன்களும் எடுத்தனர்.
இந்த நிலைய்ல் 2வது இன்னிங்ஸில் தற்போது விளையாடி வரும் நியூசிலாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு 241 ரன்கள் எடுத்துள்ளது. வில்லியம்சன் 104 ரன்களும், டெய்லர் 105 ரன்களும் எடுத்துள்ளனர்.
தற்போது மழை காரணமாக போட்டி நிறுத்தப்பட்டிருந்தாலும் இந்த போட்டி டிரா என்பது உறுதியாகியுள்ளது