அடுத்த ஜனாதிபதி அமிதாப்பச்சன். விருப்பம் தெரிவித்த பிரபல நடிகர்
பாலிவுட் திரையுலகில் இரு துருவங்களாக இருந்தவர்கள் அமிதாப்பச்சன் மற்றும் சத்ருஹன் சின்ஹா. இருவரும் இணைந்து ‘காலாபதர்’, ‘தோய்தானா’, ‘ஷான்’ போன்ற ஒருசில படங்களில் நடித்திருந்தாலும் உண்மையில் அந்த காலத்தில் தற்போதைய அஜித்-விஜய் போல போட்டியாளர்களாக இருந்தனர். இந்நிலையில் பிரணாப் முகர்ஜிக்கு பின்னர் அமிதாப்பச்சன் அடுத்த ஜனாதிபதியாக தேர்வு செய்யப்படவேண்டும் என்றும் அவ்வாறு தேர்வு செய்தால் அவருக்கும் நாட்டுக்கும் நன்மை கிடைக்கும் என்று கூறியுள்ளார்.
சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் சத்ருஹன் சின்ஹா கூறியதாவது: ‘நடிகர் அமிதாப்பச்சன் கலாச்சாரத்திலும், சமூக ரீதியிலும் பல சாதனைகள் புரிந்து, புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். அதை நினைத்து நாம் பெருமைப்பட வேண்டும். அதேநேரத்தில், அவருக்கு ஜனாதிபதி பதவி வழங்க வேண்டும். அவ்வாறு செய்தால் நமது நாட்டுக்கு நல்ல பெயர் கிடைக்கும். அவர் ஜனாதிபதியானால் அவருக்கும் பெருமை கிடைக்கும். எனவே, பிரணாப் முகர்ஜிக்கு பிறகு அமிதாப்பச்சனை ஜனாதிபதி நாற்காலியில் அமர வைத்தால் மிகப்பெரிய சந்தோஷமாக இருக்கும்” என்று கூறியுள்ளர்.
ஒருகாலத்தில் சத்ருஹன் சின்ஹாவுக்கும் அமிதாப் பச்சனுக்கும் இடையே பயங்கர கருத்து வேறுபாடு இருந்தது. அமிதாப்பச்சனின் மகன் அபிஷேக் பச்சன் திருமணத்திற்கு சத்ருஹன்சின்ஹாவுக்கு அமிதாப் அழைப்பு கூட கொடுக்கவில்லை. திருமணம் முடிந்த பின்னர் அமிதாப் கொடுத்தனுப்பிய இனிப்பு பாக்கெட்டை சத்ருஹன் சின்ஹா திருப்பி அனுப்பினார். ஆனால் தற்போது இருவரும் பழைய கருத்துவேறுபாடுகளை மறந்து நட்புடன் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.