ஹரித்துவார், கங்கை நதி பகுதிகளில் பிளாஸ்டிக் பாட்டில் விற்பனை செய்ய தடை

ஹரித்துவார், கங்கை நதி பகுதிகளில் பிளாஸ்டிக் பாட்டில் விற்பனை செய்ய தடை

gangaஇந்துக்களின் புனிதநகரமாக கருதப்படும் ஹரித்வார் மற்றும் கங்கை நதியை ஒட்டி உள்ள பகுதிகளிலும் பிளாஸ்டிக் பாட்டில்களைப் பயன்படுத்தவும் விற்பனை செய்யவும் தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடியாக தடை விதித்துள்ளது.

இதுகுறித்து உத்தராகண்ட் மாநில அரசு அதிகாரி ஒருவர் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஹரித்வாருக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்கள் தாங்கள் கொண்டுவரும் பிளாஸ்டிக் பாட்டில்களை ஆங்காங்கே வீசிவிட்டுச் செல்வதால் சுற்றுச்சூழல் பெரிதும் மாசுபடுகிறது. இந்த பாட்டில்கள் கங்கை நதிப்படுகையில் தேங்குவதால் கங்கை நதி மேலும் மேலும் மாசடைந்து வருகிறது. இதைத் தடுப்பதற்காக ஹரித்வார் நகரில் பிளாஸ்டிக் பாட்டில்களைப் பயன்படுத்த தேசிய பசுமை தீர்ப்பாயம் தடை விதித்துள்ளது.

இந்தத் தடை உத்தரவை கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும் என என்ஜிடி என்ற தேசிய பசுமை தீர்ப்பாயம் மாநில அரசைக் கேட்டுக்கொண்டுள்ளது. கங்கை நதியைச் சுற்றியுள்ள பகுதியில் பிளாஸ்டி பாட்டில் விற்பனை செய்யும் கடைகளை உடனடியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் என்ஜிடி உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதுதொடர்பாக ஒரு அதிகாரியை நியமித்துள்ள என்ஜிடி, விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு அவரை கேட்டுக்கொண்டுள்ளது. அந்த அதிகாரிக்கு தேவையான ஒத்துழைப்பு வழங்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Leave a Reply