மத்திய அரசின் கீழ் ஹரியானாவில் செயல்பட்டுவரும் NHPC நிறுவனத்தில் பயிற்சி பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Trainee Engineer (Electrical)
காலியிடங்கள்: 50
சம்பளம்: மாதம் ரூ.20,600 – 46,500.
தகுதி: பொறியியல் துறைகளில் எலக்ட்ரிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், பவர் சிஸ்டம்ஸ் மற்றும் ஹைவோல்டேஜ், பவர் போன்ற பிரிவுகளில் 60 சதவீத மதிப்பெண்களுடன் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
பணி: Trainee Engineer(Civil)
காலியிடங்கள்: 20
சம்பளம்: மாதம் ரூ.20,600 – 46,500.
தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் பி.இ அல்லது பி.டெக் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Traniee Engineer (Mechanical)
காலியிடங்கள்: 20
சம்பளம்: மாதம் ரூ.20,600 – 46,500.
தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல், புரடக்சன், தெர்மல், மெக்கானிக்கல் மற்றும் ஆட்டோமேசன் போன்ற பிரிவுகளில் 60 சதவீத மதிப்பெண்களுடன் பி.இ அல்லது பி.டெக் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Traninee Officer (Geology)
காலியிடங்கள்: 09
சம்பளம்: மாதம் ரூ.20,600 – 46,500.
தகுதி: ஜியாலஜி துறையில் எம்எஸ்சி அல்லது Applied Geology பாடத்தில் எம்.டெக் முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.04.2016 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: கேட்-2016 தகுதித் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்கள்.
விண்ணப்பிக்கும் முறை: கேட்-2016 தகுதித் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள். தகுதியுள்ளவர்கள் www.nhpcindia.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
கேட் தேர்வு நடைபெறும் தேதிகள்: 30.01.2016, 31.01.2016 மற்றும் 06.02.2016, 07.02.2016.
கேட் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி: 19.03.2016.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 01.02.2016.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.nhpcindia.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.