இந்திய அரசின் ஜவுளித் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் National Institute of Fashion Technology நிறுவனம் பெங்களூரு, போபால், சென்னை, சண்டிகர், காந்திநகர், ஐதராபாத், கண்ணூர், கொல்கத்தா, மும்பை, புதுடெல்லி, பாட்னா, ரேபரலி, சில்லாங், காங்க்ரா, ஜோத்பூர், புவனேஸ்வர் ஆகிய 15 இடங்களில் செயல்பட்டு வருகிறது. இங்கு Bachelor of Design (B.Des), Bachelor of Fashion Technology (B.F.Tech) எனும் இரு வகையான இளநிலை படிப்புகளும், Master of Design (M.Des), Master of Fashion Management (M.F.M) மற்றும் Master of Fashion Technology (M.F.Tech) ஆகிய முதுநிலைப் பட்டப்படிப்புகளும் வழங்கப்படுகின்றன. இந்தப் படிப்புகளில் சேர்வதற்கான நுழைவுத்தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது.
எத்தனை இடங்கள்?
Bachelor of Design பிரிவில், Fashion Design (390 இடங்கள்), Leather Design (120), Accessory Design (390), Textile Design (360), Knitwear Design (210), Fashion Communication (360) ஆகிய படிப்புகளில் மொத்தம் 1830 இடங்களும் Bachelor of Fashion Technology பிரிவில் Apparel Production படிப்பில் 360 இடங்களும் உள்ளன. Master of Design படிப்பில் 90 இடங்கள், Master of Fashion Management படிப்பில் 420 இடங்கள், Master of Fashion Technology படிப்பில் 100 இடங்கள் என்று முதுநிலைப் பட்டப்படிப்புகளில் மொத்தம் 610 இடங்கள் உண்டு.
கல்வித்தகுதி
+2 தேர்ச்சி பெற்றவர்கள் B.Des படிப்பில் சேரலாம். B.F.Tech படிப்பில் சேர, +2வில் இயற்பியல், வேதியியல், கணக்குப் பாடங்களைப் படித்துத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். +2 தேர்வை எழுத உள்ள மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். B.F.Tech படிப்பிற்கு மூன்றாண்டு இஞ்சினியரிங் டிப்ளமோ படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். M.Des, M.F.M படிப்புகளில் சேர ஏதாவதொரு இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது NIFT (National Institute of Fashion Technology), NID (National Institute of Design) போன்ற நிறுவனங்கள் வழங்கிய மூன்றாண்டு பட்டயப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். M.F.Tech படிப்பில் சேர NIFT நிறுவனம் வழங்கிய Bachelor of Fashion Technology பட்டம் அல்லது பி.இ/பி.டெக் பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும்.
வயது வரம்பு
இளநிலைப் பட்டப்படிப்புகளில் சேர்வதற்கு 1.10.2015 அன்று 23 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். முதுநிலைப் பட்டப்படிப்புகளில் சேர வயது வரம்பு ஏதுமில்லை.
நுழைவுத் தேர்வு
இந்தப் படிப்புகளில் சேர NIFT நிறுவனம் நடத்தும் நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இத்தேர்வினை எழுத விரும்புபவர்கள் www.nift.ac.in/admissions.html எனும் இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். பொதுப்பிரிவினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ரூ.1500, எஸ்.சி, எஸ்.டி., மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.750 விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும். தாமதக்கட்டணமின்றி விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 10.1.2016. தாமதக்கட்டணம் ரூ 5000 சேர்த்துச் செலுத்தி விண்ணப்பிக்கக் கடைசி நாள் 16.1.2016.
தேர்வு மையங்கள்
சென்னை, கோவை, மதுரை உட்பட இந்தியா முழுவதும் 32 மையங்களில் 14.2.2016 அன்று தேர்வு நடைபெறும். B.Des, M.Des படிப்புகளுக்கு, காலையில் Creative Ability Test , பிற்பகலில் General Ability Test எனும் இரண்டு எழுத்துத் தேர்வுகள் நடத்தப்பெறும். B.F.Tech, M.F.M., M.F.Tech ஆகிய படிப்புகளுக்கு General Ability Test மட்டும் நடைபெறும். தேர்வுக்கான அனுமதி அட்டையை 21.1.2016 மதியம் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 2016, ஜூன் மாதம் கலந்தாய்வின் மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறும். இப்படிப்பில் வெளிநாட்டினர் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கும் சில இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும் விவரங்களுக்கு, சென்னையிலிருக்கும் NIFT கல்வி நிறுவனத்தை 044-22542755 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.