தீவிரவாதிகளுக்கு எதிராக போரிட மறுத்த ராணுவ வீரர்களுக்கு மரண தண்டனை. நைஜீரியாவில் பரபரப்பு.

nigeria-army-court-martialஇஸ்லாமிய தீவிரவாதிகளை போரிட மறுத்த 54 ராணுவ வீரர்களுக்கு நைஜீரிய ராணுவ நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. இதனால் நைஜீரியாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நைஜீரியாவை சேர்ந்த சில ராணுவ வீரர்கள் இஸ்லாமிய தீவிரவாதிகளை எதிர்த்து போரிட மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இஸ்லாமிய ஆதரவு மனப்பான்மை, பயம், மற்றும் வேறு சில காரணங்களால் ஒருசில ராணுவ வீரர்கள் இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலில் கலந்து கொள்ள மறுத்துவிட்டனர். அவர்கள் அனைவர் மீது நடவடிக்கை எடுக்க ராணுவ தலைமை உத்தரவிட்டதை தொடர்ந்து ராணுவ நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று காலை வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பில் குற்றம் நிரூபிக்கப்பட்ட 54 ராணுவ வீரர்களுக்கு மரண தண்டனை வழங்கப்படுவதாக அதிரடி தீர்ப்பை ராணுவ நீதிமன்றம் வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பு காரணமாக அந்நாட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.[/dropcaps]

Leave a Reply