ஸ்பெயின் விமான நிலையத்தில் நைஜீரியர் மர்ம மரணம். எபோலா பாதிப்பா?

nigeriaநைஜீரியா நாட்டை சேர்ந்த ஒருவர் ஸ்பெயின் விமான நிலையத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் தனது வயிற்றுக்குள் போதைப்பொருளை கடத்தி வந்ததாகவும், அந்த போதைப்பொருள் வயிற்றில் இருந்து பிரிந்து ரத்தத்தில் கலந்துவிட்டதால் அவர் மரணம் அடைந்துவிட்டதாகவும் கூறினர்.

ஸ்பெயின் நாட்டின் உள்ள மாட்ரிட் பஜாரஸ் விமான நிலையத்திற்கு வந்த நைஜீரிய நாட்டை சேர்ந்த ஒருவர் தனது வயிற்றுக்குள் போதை மருந்து கலந்த உருண்டையை விழுங்கி, கடத்த முயற்சித்துள்ளார். இந்நிலையில் அவர் விழுங்கிய ஒரு உருண்டையில் இருந்து போதை மருந்து வெளியே வந்து அவரது ரத்தத்தில் கலந்ததால் விமான நிலையத்திலேயே அவர் ம்ரணம் அடைந்தார்.

விமான நிலையத்தில் திடீரென ஒருவர், அதுவும் நைஜீரியா நாட்டவர் மரணம் அடைந்ததால், அவருக்கு எபோலா வைரஸ் பாதிக்கப்பட்டிருக்கலாம் என அஞ்சி யாரும் அவர் அருகே செல்ல அஞ்சினர்.

இந்நிலையில் ஸ்பெயின் மருத்துவர்கள் அவரது உடலை சோதனை செய்தபோது, அவர் போதை மருந்தால் மரணம் அடைந்ததாகவும், அவருக்கு எபோலா நோய் பாதிப்பு எதுவும் இல்லை என்றும் தெரிவித்தனர்.

இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Reply