நைஜீரிய எண்ணெய் கிணறுகளை தகர்க்கப்போவதாக மிரட்டல்.

நைஜீரியா நாட்டில் பொகோ ஹாரம் என்ற தீவிரவாத அமைப்பு அந்நாட்டு அரசு கடும் தலைவலியை கொடுத்து வருகிறது. சமீபத்தில் அந்த தீவிரவாத அமைப்பு வெளியிட்ட ஒரு வீடியோ காட்சியில், கச்சா எண்ணெய் வளம் மிக்க நைஜர் ஆற்றுப்படுகை பகுதியில் வரும் நாட்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த உள்ளோம் என்று அந்த அமைப்பின் தலைவர் அபுபக்கர் ஷேகவ் மிரட்டல் விடுத்துள்ளார். இந்த வீடியோ காட்சி 28 நிமிடங்கள் ஓடுகின்றன. இந்த வீடியோ காட்சிகளை எப்பொழுது, எங்கு எடுக்கப்பட்டது என்று தெரியவில்லை என நைஜீரிய அரசு தெரிவித்துள்ளது.

ஆப்பிரிக்க நாட்டின் முக்கிய கச்சா எண்ணெய் வளம் மிகுந்த நாடாக விளங்கும் நைஜீரியா, இதன்மூலம் மட்டுமே நாட்டின் 90 சதவீத வருமானத்தை பெற்று வருகிறது. இதனால் தீவிரவாதிகள் அமைப்புகள் முக்கிய கச்சா எண்ணெய் கிணறுகளை சேதப்படுத்திவிட்டால், நாட்டின் பொருளாதாரமே ஸ்தம்பித்துவிடும் அபாயம் இருக்கிறது. இதனால் கச்சா எண்ணெய் கிணறுகளுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் ராணுவத்தை பாதுகாப்பு பணியில் ஈடுபட வைக்கவும் அரசு ஆலோசித்து வருகிறாது.

மேலும் இந்த தீவிரவாத அமைப்பு நைஜீரியாவில் உள்ள சில முக்கிய முஸ்லீம் தலைவர்களையும், அரசிய பிரமுகர்களையும் கொலை செய்யப்போவதாக மிரட்டியுள்ளது.

 

[embedplusvideo height=”300″ width=”500″ editlink=”http://bit.ly/Nna7wy” standard=”http://www.youtube.com/v/sLz0U6E-iT4?fs=1″ vars=”ytid=sLz0U6E-iT4&width=500&height=300&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=&notes=” id=”ep5903″ /]

Leave a Reply