பிரபுதேவாவுடன் திருமணமா? நடிகை நிகிஷா பட்டேல் மறுப்பு

பிரபுதேவாவுடன் திருமணமா? நடிகை நிகிஷா பட்டேல் மறுப்பு

தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்து வரும் நடிகை நிகிஷா பட்டேல். கவர்ச்சியான நடிப்பின் மூலம் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துள்ள நிகிஷா, பிரபுதேவாவை திருமணம் செய்யவுள்ளதாக சமீபத்தில் பேட்டியளித்தார் என்று செய்திகள் வெளியாகின. ஆனால் இந்த தகவலை நிகிஷா மறுத்துள்ளார்.

பிரபுதேவா போன்ற ஒருவரை திருமணம் செய்யவுள்ளதாக அந்த பேட்டியில் தான் கூறியதாகவும், தன்னுடைய பேட்டி தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருப்பதாகவும் நிகிஷா பட்டேல் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராகவும், இந்தி சினிமாவுலகில் இயக்குனராகவும் இருந்த பிரபுதேவா.ஏற்கனனவே நயன்தாராவுடன் காதல் கொண்டிருந்தவர் என்பதும் இதற்காக அவர் தனது மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற்றார் என்பதும் பின்னர் திடீரென பிரபுதேவா – நயன்தாரா காதல் முறிந்தது என்பதும் தெரிந்ததே

 

Leave a Reply