குஜராத்தை நெருங்கும் நிலோபர் புயல். பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்.

niloferஅரபிக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது வலுவடைந்து பெரும் புயலாக மாறியுள்ளது.  நிலோபர் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புயலால் குஜராத் மற்றும் பாகிஸ்தான் நாட்டின் கடலோர பகுதியில் பெரும் பாதிப்பு ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. .

குஜராத் மாநிலத்தின் நலியா நகருக்கு தென் மேற்கே 900 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ள இந்த நிலோபர் புயல், அடுத்த 12 மணி நேரத்தில் பாகிஸ்தான் கடற்கரை மற்றும் வடக்கு குஜராத் பகுதியில் நாளை மறுநாள் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாககுஜராத்தின் வடக்கு கடற்கரை பகுதியில் இன்று முதல் பலத்த மழை பெய்யும் என்றும் காற்றின் வேகம் 210 கிலோ மீட்டர் வரை இருக்கும் என்று வானிலை அறிக்கை எச்சரித்துள்ளது.

குஜராத்தில் உள்ள கட்ச் மாவட்டத்தில் 8 தாலுகாவில் உள்ள 128 கிராமங்களை சேர்ந்த 30 ஆயிரம் மக்கள் இன்று பாதுகாப்பு நடவடிக்கைக்காக  வெளியேற்றப்பட்டனர்.  மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்றும், இப்பகுதி மக்கள் இரண்டு நாட்களுக்கு வீட்டை விட்டு வெளியே வரவேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு இருக்கிறது.

புயலினால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்நோக்கி தேசிய மீட்பு படை, தேசிய பேரிடர் குழு போன்ற அனைத்து வசதிகளும் தயார் நிலையில் உள்ளன. இந்திய விமானப்படையும் உஷார் படுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply