ஜப்பானின் மோச்சிக்கு 9 பேர் பலி. புத்தாண்டு கொண்டாட்டத்தில் விபரீதம்.

japan rice cakeஜப்பான் நாட்டில் ரைஸ் கேக் என்று சொல்லப்படும் மோச்சி என்ற உணவு வகை மிகவும் புகழ்பெற்றது. இது பார்ப்பதற்கு நம்மூர் கொழுக்கட்டை போல இருக்கும். கடந்த புத்தாண்டு தினத்தில் சந்தோஷ மிகுதியால் மோச்சி உணவை ஏராளமான பேர் வாங்கி சாப்பிட்டனர். இந்த உணவினுள் வைக்கப்பட்டிருக்கும் பொருட்களுக்கு ஒட்டும் தன்மை இருக்கும் என்பதால் இதை நன்றாக மென்று சாப்பிட வேண்டும். ஆனால் புத்தாண்டு கொண்டாட்டத்தில் மதுபோதையில் இருந்த பலர் அவசர கதியில் இந்த மோச்சியை சாப்பிட்டனர்.

இதனால் ஒருசிலருக்கு தொண்டையில் அடைப்பு ஏற்பட்டு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனடியாக அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இருப்பினும் சிகிச்சையின் பலனின்றி 9 பேர் பரிதாபமாக மரணம் அடைந்தனர்.  இதே பிரச்சனையின் காரணமாக இன்னும் 128 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர்களில் ஒருசிலர் அபாயகட்டத்தில் உள்ளதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன.

Leave a Reply