நிர்பயா குற்றவாளிகள் டிசம்பர் 16ல் தூக்கு தண்டனை. ஆனால் அதில் திடீர் திருப்பம்
டெல்லி மருத்துவக் கல்லூரி மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளுக்கு டிசம்பர் 16ஆம் தேதி தூக்கு தண்டனை விதிக்கப்படும் என்றும் அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் தூக்கு தண்டனையை நிறைவேற்ற இரண்டு சிறப்பு காவலர்கள் உத்தரப் பிரதேசத்திலிருந்து பயணம் செய்ய இருப்பதாகவும் சற்றுமுன் செய்தி வந்தன
ஆனால் இந்த நிலையில் அதில் ஒரு திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. நிர்பயா வழக்கில் குற்றவாளிகளில் ஒருவரான அக்ஷய் குமார் சிங் தாக்கல் செய்த சீராய்வு மனு மீது டிசம்பர் 17ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது
டிசம்பர் 16ஆம் தேதி தூக்கில் இடும் பணிகள் தீவிரமடைந்து வரும் நிலையில் டிசம்பர் 17ஆம் தேதி இந்த சீராய்வு மனுவும் விசாரணைக்கு வர உள்ளது என்பதால் அதன் டிசம்பர் 16ஆம் தேதி தூக்கிலிட வாய்ப்பு இல்லை என்றே கருதப்படுகிறது