நிர்மலாதேவி விவகாரம்: உதவி பேராசிரியர் முருகன் கைது

நிர்மலாதேவி விவகாரம்: உதவி பேராசிரியர் முருகன் கைது

அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலாதேவி வழக்கை சிபிசிஐடி போலீசார் மற்றும் கவர்னர் அமைத்த சந்தானம் கமிஷன் ஆகியோர் விசாரணை செய்து கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் நிர்மலாதேவிக்கு உதவியாக இருந்த மதுரை காமராஜர் பல்கலைக்கழக உதவி பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி பட்டப்படிப்பு மாணவர் கருப்பசாமி ஆகியோர்களிடம் விசாரணை செய்ய போலீசார் முடிவு செய்தனர்.

ஆனால் இருவரும் திடீரென தலைமறைவாகிவிட்டதால் அவர்களை பிடிக்க 4 தனிப்படையை போலீசார் அமைத்தனர். இந்த நிலையில் இன்று பல்கலைக்கழக வளாகத்தில் வருகை பதிவேட்டில் கையெழுத்திட வந்த உதவி பேராசிரியர் முருகனை போலீசார் கைது செய்தனர். இதன்பின்னர் அவரிடம் இன்று விசாரணை செய்ய முடிவெடுத்துள்ளனர்.

இந்த நிலையில் மாணவர் கருப்பசாமியையும் பிடிக்க போலீசார் தீவிர முயற்சியில் உள்ளனர்

Leave a Reply