ப.சிதம்பரம் குடும்பத்தினர்களுக்கு ரூ.20 ஆயிரத்து 100 கோடி சொத்துக்கள்: நிர்மலா சீதாராமன் திடுக் தகவல்
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் குடும்பத்தினர்கள் 14 நாடுகளில், 21 வெளிநாட்டு வங்கி கணக்குகளில் 3 பில்லியன் டாலர் (சுமார் ரூ.20 ஆயிரத்து 100 கோடி) அளவுக்கு சட்ட விரோத சொத்துகளை குவித்து இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
மேலும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இந்த மூத்த தலைவர் ப.சிதம்பரம் வெளிநாட்டு வருமானத்தை மறைத்த விவகாரத்தில் நிச்சயமாக கருத்து சொல்ல வேண்டும். அவர் ப.சிதம்பரத்திடம் விசாரணை நடத்துவாரா? என்பது குறித்து நாட்டு மக்களிடம் கூற வேண்டும் என்றூம் நிர்மலா சீதாராமன் பேசினார்.
இதற்கு பதிலளித்துள்ள ப.சிதம்பரம், ”இந்தியாவின் மிகப் பணக்காரக் கட்சியின் தலைவர் கோடிக்கணக்கான டாலர்களைப் பற்றிக் கனவு காண்கிறார். அந்தப் பணத்தை மீட்டு ஒவ்வொரு இந்தியனின் வங்கிக் கணக்கிலும் ரூ 15 லட்சம் போட வேண்டியதுதானே என குறிப்பிட்டு உள்ளார். திருமதி நிர்மலா சீதாராமனை பாதுகாப்பு அமைச்சர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு, வருமான வரித்துறையின் வழக்கறிஞராக நியமிக்க வேண்டும், அவரை பார் கவுன்சிலுக்கு வரவேற்கிறோம் எனவும் கூறிஉள்ளார்.