ஓபிஎஸ்-ஐ சந்திக்க நிர்மலா சீதாராமன் மறுப்பா? டுவீட் ஏற்படுத்திய பரபரப்பு

ஓபிஎஸ்-ஐ சந்திக்க நிர்மலா சீதாராமன் மறுப்பா? டுவீட் ஏற்படுத்திய பரபரப்பு

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை இன்று தமிழக துணை முதல்வர் சந்திக்கவிருப்பதாக தகவல்கள் வெளிவந்த நிலையில் அவரை சந்திக்க நிர்மலா சீதாராமன் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து நிர்மலா சீதாராமனின் அலுவலக டுவிட்டர் பக்கத்தில், ‘டெல்லியில் அதிமுக எம்.பி. மைத்ரேயனை சந்திக்கவே மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நேரம் ஒதுக்கி உள்ளார். துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், நிர்மலா சீதாராமனை சந்திக்கவில்லை என பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அலுவலகம் டுவிட்டர் மூலம் தகவல் தெரிவித்துள்ளது. இதனையடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

ஏற்கனவே அமித்ஷாவை ஓபிஎஸ் சந்திக்க திட்டமிட்டிருந்ததாக கூறப்பட்ட நிலையில் அந்த சந்திப்பும் நடக்கவில்லை. எனவே டெல்லி சென்ற துணை முதல்வர் ஓபிஎஸ் எந்த தலைவரையும் சந்திக்கவில்லை என்றே கூறப்படுகிறது.

Leave a Reply