மனைவிகளை அடித்து சித்ரவதை செய்யும் கணவர்களை சும்மா விடமாட்டேன். அமைச்சர் நிர்மலா

Nirmala Sitharamanமனைவிகளை அடித்து உதைத்து சித்ரவதை செய்யும் கணவர்களை சும்மா விட மாட்டேன் என்று  மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர்  நிர்மலா சீதாராமன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பாரத பிரதமர் நரேந்திர மோடியின் ஆணைக்கிணங்க ஆந்திரா மாநிலத்தில், மேற்கு கோதாவரி மாவட்டம்  துர்ப்பிதாலு, வெதாம்யினா வானிகலங்கா கிராமத்தை தத்து எடுத்துள்ள நிர்மலா சீதாராமன் நேற்று அந்த கிராமத்துக்குச்  சென்று நலப்பணிகளை பார்வையிட்டார். தனது கணவருடன் சென்று அந்தக் கிராமத்தை தூய்மை செய்த அமைச்சர் நிர்மலா, பின்னர் கிராம மக்கள் மத்தியில் பேசினார். அப்போது, “மது குடித்துவிட்டு வரும் ஆண்கள் அவர்களது மனைவியை அடித்து உதைக்கும் கொடுமைகள்  இன்னும் நமது நாட்டில் நடந்துகொண்டு தான் இருக்கின்றது.  இதுபோன்ற கொடுமையை நானே பல சமயங்களில் பார்த்துள்ளேன். ஆனால் இனிமேல் கணவர்மார்கள் அப்படி செய்தால் நான் சும்மா பார்த்துக்கொண்டு இருக்க மாட்டேன். அவர்களுக்கு எதிராக நானே போராட்டம் நடத்துவேன்.

இந்த கிராமத்தில் ஒரு சமுதாய கூடம் அமைக்கப்பட உள்ளது. அதில்  பெண்கள் அவ்வப் போது கூடி தங்களது கஷ்ட– நஷ்டங்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளலாம். கணவர் உங்களை அடித்தால் நீங்கள் இந்த சமுதாய கூடத்திலேயே தங்கி விட வேண்டும். உங்கள் கணவர் வருத்தம் தெரிவிக்கும் வரை வீட்டுக்கு செல்லக்கூடாது. இந்தச்  சமுதாய கூடத்தில் அனைத்து வசதிகளும் செய்யப்படும். 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம் கிடைக்கவும் ஏற்பாடு செய்யப்படும்.

இவ்வாறு நிர்மலா சீதாராமன் பேசினார்.

Leave a Reply