நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார் நிதிஷ்குமார்
பீகார் முதல்வர் நிதிஷ்குமார் நேற்று முன் தினம் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பின்னர் பாஜக ஆதரவுடன் நேற்று மீண்டும் முதல்வராக பதவியேற்றார். அவர் தனது மெஜாரிட்டியை இரண்டு நாட்களுக்குள் நிரூபிக்க வேண்டும் என்று கவர்னர் உத்தரவிட்டிருந்த நிலையில் சற்றுமுன் நிதிஷ்குமார் தனது பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சியை தக்க வைத்து கொண்டார்
சற்றுமுன் நடந்த சிறப்பு சட்டமன்ற கூட்டத்தில் முதல்வர் நிதிஷ்குமார் ஆதரவு கேட்ட நிலையில் அவருக்கு ஆதரவாக 131 வாக்குகளும் எதிராக 108 வாக்குகளும் கிடைத்தன. அவரது கட்சி எம்எல்ஏக்கள், பாஜக, கூட்டணி எம்எல்ஏக்கள் வாக்களித்ததை அடுத்து அவர் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார்.
பீகார் சட்டசபையில் தனது பெரும்பான்மையை நிரூபித்ததை அடுத்து பீகாரில் நிதிஷ்குமார் தலைமையிலான ஆட்சி தப்பியது.