ரத்துசெய்யபப்பட்டுள்ளதாக மதுரை ஆதீனம் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.
மதுரை இளைய ஆதீனமாக நியமிக்கப்பட்ட நித்யானந்தாவை மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் கடந்த 19-ந்தேதி நீக்கம் செய்யப்பட்டார்.
இதனையடுத்து அருணகிரிநாதருக்கு கொலை மிரட்டல் உள்ளதாகவும், காவல்துறை பாதுகாப்பு வேண்டி புகார் மனு ஒன்றை அளித்தார். இதனால் மதுரை ஆதீன மடத்தின் முன்பு காவல்துறை பாதுகாப்பு அளிக்கப்பட்டது.
நித்யானந்தா நீக்கப்பட்டதால், ஆதீன மடத்தில் இருந்த நித்யானந்தா சீடர்கள் வெளியேறினர். ஆனால் அவர்களின் உடமைகளை 4 அறைகளில் வைத்து பூட்டி விட்டு சென்று விட்டனர்.
நித்யானந்தா நீக்கப்பட்ட பிறகு பல்வேறு தரப்பில் இருந்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வண்ணம் உள்ளன. பக்தர்களும் தினமும் ஏராளமானோர் வந்து வழிபாடு நடத்தி செல்கின்றனர்.
நித்யானந்தாவால் நடத்தப்பட்ட 24 மணி நேர அன்னதான திட்டம் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், ஆன்மீக பணிகள் அனைத்தும் தொடர்ந்து நடைபெறும் என்றும், மதுரை ஆதீன கட்டுப்பாட்டில் உள்ள 4 கோவில்களுக்கு விரைவில் கும்பாபிஷேகம் நடைபெறும் என்றும் அவர் மேலும் கூறினார்.