நித்யானந்தாவுக்கு நடத்தப்பட்ட ஆண்மை பரிசோதனை அறிக்கை தயாராகிவிட்டதாகவும், அந்த அறிக்கையை சி.ஐ.டி. போலீசிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும், நித்யானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழு கூறியுள்ளது.
பெங்களூர் அருகே பிடதியில் உள்ள தியான பீடத்தில் நித்யானந்தா சாமியார் மீது அதே ஆசிரமத்தில் தங்கியிருந்த பெண் சீடர் ஆர்த்திராவ் நித்யானந்தா மீது பாலியல் புகார் கூறினார். இதுகுறித்து வழக்கு ஒன்றை போலீஸார் நித்தியானந்தா மீது பதிவு செய்தனர். பின்னர் இந்த இந்த வழக்கு விசாரணை சி.ஐ.டி. பிரிவுக்கு மாற்றப்பட்டது.
விசாரணையின்போது நித்யானந்தா கூறிய தகவல்களின்படி, நித்தியானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை செய்யவேண்டுமென சி.ஐ.டி. போலீஸார் கோரிக்கை விடுத்தனர். அவர்களுடைய கோரிக்கையை ஏற்று கொண்ட நீதிமன்றம் நித்தியானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை செய்ய ராமநகர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது. ஆனால் இந்த பரிசோதனையை எதிர்த்து நித்யானந்தா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களை கர்நாடக உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தன. மேலும், ஆண்மை பரிசோதனைக்கு ஆஜராகும்படி நித்யானந்தாவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் கடந்த 8 ஆம் தேதி பெங்களூர் விக்டோரியா மருத்துவமனையில் 7 பேர் கொண்ட மருத்துவ குழு நித்தியானந்தாவுக்கு 5½ மணி நேரம் ஆண்மை பரிசோதனை நடத்தினார்கள். இந்த பரிசோதனையின் அறிக்கையை தற்போது அந்த மருத்துவர் குழுவினர் சி.ஐ.டி. போலீஸ் அதிகாரியிடம், நேற்று இரவு வழங்கி உள்ளனர். இந்த அறிக்கையில் உள்ள தகவல்கள் குறித்து கருத்து தெரிவிக்க மருத்துவர்கள் குழு மறுத்துவிட்டது.