தமிழகம் எப்போதும் பாஜகவுக்கு பிரச்சனை தான். மத்திய அமைச்சர் ஆதங்கம்

தமிழகம் எப்போதும் பாஜகவுக்கு பிரச்சனை தான். மத்திய அமைச்சர் ஆதங்கம்

நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களும் பாஜகவுக்கு சாதகமான சூழ்நிலை இருக்கும்போது தமிழகம் மட்டும் எப்போதுமே பிரச்சனைக்குரிய மாநிலமாக உள்ளது என்று மத்திய அமைச்சர் நிதின்கட்காரி கூறினார்

மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகள் நிறைவடைவதை அடுத்து மத்திய அரசின் சாதனை விளக்க கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. சென்னை அமைந்தகரையில் நடந்த இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, பொன் ராதாகிருஷ்ணன், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் நிதின் கட்கரி, நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பாஜக சிறப்பான வளர்ச்சி பெற்றுள்ளது. ஆனால் தமிழகம் மட்டும் தான் பிரச்னையாக இருந்து வருகிறது.

பல்வேறு மாநிலங்களில் ஏராளமான பாஜக எம்.பிக்கள் உள்ளனர். ஆனால் தமிழகத்தில் ஒரே ஒரு பாஜக எம்பி மட்டுமே இருப்பதால், மத்திய அரசின் சாதனைகளை விளக்கிக் கூற இயலாத சூழல் இருப்பதாக குறிப்பிட்டார். தமிழக அரசியல் வெற்றிடத்தை, மத்திய அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி நிரப்ப வேண்டும் என்று வலியுறுத்தினார்.

Leave a Reply