பீகார் முதல்வராக இன்று மீண்டும் பதவியேற்ற நிதிஷ்குமார்
பீகார் மாநில முதல்வராக இருந்த நிதிஷ்குமார், லாலுபிரசாத் யாதவுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில் பாஜக ஆதரவுடன் இன்று மீண்டும் முதல்வராக பதவியேற்று கொண்டார்.
பாஜக எம்.எல்.ஏக்கள் 53 பேரும் நிதிஷ்குமாருக்கு ஆதரவு அளிக்க முன்வந்துள்ளதால் அவருக்கு கவர்னர் திரிபாதி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். மேலும் முதல்வர் நிதிஷ்குமாருக்கு பெரும்பான்மையை நிரூபிக்க இரண்டு நாள் கெடு விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பீகாரில் ராஷ்டிரிய ஜனதா கட்சிக்குத்தான் அதிக எம்.எல்.ஏக்கள் இருப்பதால் தன்னை ஆட்சி அமைக்க கவர்னர் அழைக்க வேண்டும் என்று லாலு பிரசாத் மகன் வேண்டுகோள் விடுத்தார். ஆனால் அவரது வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டதாக தெரிகிறது.
நிதிஷ்குமாரின் ஜனதா தள் கட்சிக்கு 71 எம்.எல்.ஏக்களும், பாஜகவுக்கு 53 எம்.எல்.ஏக்களும் இருப்பதால் பெரும்பான்மையை நிரூபிப்பதில் எவ்வித சிக்கலும் இருக்காது என்று கூறப்படுகிறது.