பீகாரில் முழு மதுவிலக்கு அமல். முதல்வர் நிதீஷ்குமார் அதிரடி அறிவிப்பு

பீகாரில் முழு மதுவிலக்கு அமல். முதல்வர் நிதீஷ்குமார் அதிரடி அறிவிப்பு

nitesh kumarதமிழகத்தில் கடந்த சில மாதங்களாக பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என அனைத்து அரசியல் கட்சிகளும் ஆளுங்கட்சிக்கு நெருக்கடி கொடுத்து வந்த நிலையில் மதுவிலக்கை அமல்படுத்துவதற்கான எந்த அறிகுறியும் இங்கு தெரியவில்லை. ஆனால் பீகாரில் புதியதாக பதவியேற்றிருக்கும் மெகா கூட்டணியின் முதல்வர் நிதிஷ்குமார் 2016-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி பீகாரில் முழு அளவில் மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற பீகார் சட்டமன்ற தேர்தலின் போது ‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால்  மது விற்பனைக்கு தடை விதிப்பேன்’ என்று நிதீஷ்குமார் வாக்குறுதி கொடுத்திருந்தார். அதன்படி தான் கொடுத்த வாக்குறுதியை நிதிஷ்குமார் இன்று நிறைவேற்றியுள்ளார்.

இன்று காலை தலைநகர் பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் நிதிஷ்குமார், அடுத்த ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் மது விற்பனைக்கு தடை விதிக்கப்படும் என அதிரடியாக அறிவித்தார். நிதிஷ்குமாரின் இந்த அறிவிப்பால் பீகார் மாநில பெண்கள் அமைப்பு மட்டுமின்றி இந்தியாவில் உள்ள அனைத்து மாநில பெண்கள் அமைப்புகளும் அவருக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.\

English Summary: Nitish Kumar announces liquor ban in Bihar from April 1 , 2016

Leave a Reply