தேசியகனிம மேம்பாட்டுக் கழகத்தின் கீழ் இயங்கும் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான கர்நாடகா, பெல்லாரியில் உள்ள இரும்புத்தாது ஆலையில் இளநிலை உதவியாளர் மற்றும் பல்நோக்கு பணியாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணியிடங்கள் விவரம்:
1. இளநிலை உதவியாளர் (நிலை – 3) (டிரெய்னி):
1 இடம்.
தகுதி:
கலை/ அறிவியல்/ வணிகவியல் பாடங்களில் ஏதேனும் ஒரு பட்டம் மற்றும் ஆங்கிலம் அல்லது இந்தி டைப்பிங்கில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் டைப்பிங் செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். கிளார்க் பணியில் ஓராண்டு முன் அனுபவம் இருக்க வேண்டும்.
2. பல்நோக்கு பணியாளர் (பயிற்சி):
12 இடங்கள்.
தகுதி:
8ம் வகுப்பு தேர்ச்சி.
எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். தேர்ந்தெடுக்கப்படுவர்களுக்கு 18 மாதங்கள் பயிற்சி அளிக்கப்படும்.
சம்பளம்:
ஜூனியர் அசிஸ்டென்ட் பணி்க்கு முதல் 12 மாதங்கள் பயிற்சி உதவித் தொகையாக ரூ.12 ஆயிரமும், அடுத்த 6 மாதங்கள் ரூ.12,500ம் வழங்கப்படும். பல்நோக்கு பணியாளருக்கு முதல் 12 மாதங்கள் ரூ.11 ஆயிரமும், அடுத்த 6 மாதங்கள் ரூ.11,500ம் வழங்கப்படும்.
பயிற்சிக்கு பின்னர் ஜூனியர் அசிஸ்டென்ட்டாக தேர்வு செய்யப்படுவர்கள் ரூ.11,670 – 3% – 20,600 என்ற விகிதத்திலும், பல்நோக்கு பணியாளர் ரூ.11,000 – 3% – 19,410 என்ற விகிதத்திலும் பணியில் அமர்த்தப்படுவார்கள்.
மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.nmdc.co.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:
The Deputy General Manager (Personnel),
NMDC Limited, Donimalai Iron Ore Mine,
Donimalai Complex, Donimalai- 583 118,
Sandur Taluk, Bellari District,
KARNATAKA.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 22.8.2015.