விஜயகாந்த் தனித்து போட்டி அறிவிப்பால் என்ன நடக்கும்? ஒரு பார்வை
திமுக-காங்கிரஸ் கூட்டணியில் தேமுதிக, 55 தொகுதிகள், பெட்டி போயிருச்சு, என்ற வதந்தைகளுக்கு தற்போது முடிவு தெரிந்துவிட்டது. திமுகவுடன் கூட்டணி இல்லை என்பதை மட்டும் விஜயகாந்த் தெளிவாக தெரிவித்துவிட்டார். ஏற்கனவே அதிமுக கூட்டணி, திமுக-காங்கிரஸ் கூட்டணி, பாமக தனித்து போட்டி, மக்கள் நலக்கூட்டணி, பாஜக கூட்டணி என ஐந்து கூட்டணிகள் தனித்தனியாக போட்டியிடும் நிலையில் விஜயகாந்தும் தனித்து போட்டி என கூறியுள்ளதால் இந்த தேர்தலில் இதுவரை இல்லாத வகையில் ஆறு கூட்டணிகள் போட்டியிடுகின்றன.
ஐந்து கூட்டணிகளும் அதிமுகவைத்தான் விமர்சனம் செய்து மக்களிடம் வாக்குகள் கேட்க இருக்கின்றன. இதனால் ஆட்சிக்கு எதிரான ஓட்டுக்கள் ஐந்தாக பிரிய வாய்ப்பு உள்ளது. எனவே இந்த ஆறு கூட்டணிகள் தேர்தல் வரை உறுதியாக இருந்தால் கண்டிப்பாக மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வருவதை யாராலும் தடுக்க முடியாது என்றே தோன்றுகிறது.
ஆனாலும் விஜயகாந்துடன் ஒரு சில கட்சிகளும், மக்கள் நல கூட்டணி இணைந்து ஒருசில கட்சிகளுடன் கூட்டணி சேரும் என்று எதிர்பார்க்கப்படுவதால் ஆறு கூட்டணி என்பது குறைந்த பட்சம் நான்காக மாற வாய்ப்பு உள்ளது என்றும், அப்படி இருந்தாலும் அதிமுகவுக்கு சாதகமாகவே அமையும் என்றும் அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.