காங்கிரஸ் கட்சியுடன் இனி கூட்டணி கிடையாது: மார்க்கிஸ்ட் கம்யூ. அறிவிப்பு

காங்கிரஸ் கட்சியுடன் இனி கூட்டணி கிடையாது: மார்க்கிஸ்ட் கம்யூ. அறிவிப்பு

கேரளா உள்ளிட்ட ஒருசில மாநிலங்களில் எதிரெதிர் கட்சிகளாக இருக்கும் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் தேசிய அளவில் நடைபெறும் தேர்தலில் கூட்டணி வைப்பதுண்டு. இந்த நிலையில் காங்கிரசுடன் இனி மா.கம்யூனிஸ்டு கட்சி கூட்டணி வைத்துக்கொள்ளாது என்று அந்த கட்சி உறுதியுடன் அறிவித்துள்ளது.

ஐதராபாத்தில் நேற்று மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 22வது மாநாடு நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பொதுச் செயலாளராக சீதாராம் யெச்சூரி மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். இரண்டாவது முறையாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பொதுச் செயலாளராக பலத்த எதிர்ப்புகளுடன் தேர்வு செய்யப்பட்ட சீதாராம் யெச்சூர்ய் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது கூறியதாவது:

“நாடாளுமன்ற தேர்தலின்போது மாநிலங்களின் கள நிலவரப்படி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கூட்டணி அமைக்கும். காங்கிரசுடன் கண்டிப்பாக கூட்டணி கிடையாது. அதேநேரம் நாடாளுமன்றத்துக்கும், உள்ளேயும் வெளியேயும் வகுப்புவாத சக்திகளை தடுத்து நிறுத்த ‘புரிந்துகொள்ளல்’ அடிப்படையில் செயல்படுவோம்” என்று கூறினார்

Leave a Reply