கூட்டணியும் இல்லை, திரைப்படமும் இல்லை: கமல் குறித்து ரஜினிகாந்த் அதிரடி முடிவு

கூட்டணியும் இல்லை, திரைப்படமும் இல்லை: கமல் குறித்து ரஜினிகாந்த் அதிரடி முடிவு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமலஹாசன் ஆகிய இருவரும் இணைந்து வரும் தேர்தலில் செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் கமலஹாசனை கூட்டணியில் சேர்த்துக் கொள்ள ரஜினி ஓரளவுக்கு விரும்பினாலும் ரஜினியை சுற்றி இருப்பவர்கள் கமல்ஹாசனை கூட்டணியில் இணைத்துக் கொள்ள விரும்பவில்லை என்று கூறப்படுகிறது

கடந்த இரண்டு ஆண்டுகளாக ரஜினியை மறைமுகமாகவும் நேரடியாகவும் நண்பர் என்றும் கூட பாராமல் கடுமையாக விமர்சனம் செய்த கமலஹாசனை கூட்டணியில் கூட்டணியில் இணைத்தால், நாளை ஆட்சியை பிடித்தவுடன் தன்னுடைய கூட்டணி காரணமாகத்தான் ஆட்சியை பிடித்ததாக சொந்தம் கொண்டாடுபவர் என்று அவருக்கு நெருக்கமான ஒரு வலியுறுத்தி வருகின்றனர் எனவே கமல் கட்சி சொந்தம் கொண்டாட வாய்ப்பு உள்ளது என்றும், எனவே கமலுடன் ரஜினி கூட்டணி வைக்க மாட்டார் என்று கூறப்படுகிறது

அதேபோல் கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கவிருப்பதாக கூறப்படும் திரைப்படம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை ரஜினியின் 100 கோடி ரூபாய் சம்பளத்தை கமல்ஹாசன் கொடுக்க வாய்ப்பில்லை என்றும் பார்ட்னர்ஷிப் ஒப்பந்தத்தின்படி தான் இந்த படம் தயாரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் ஆனால் அதற்கு ரஜினிகாந்த் ஒப்புக்கொள்ள மாட்டார் என்றும் கூறப்படுகிறது. எனவே ரஜினி-கமல் கூட்டணி சாத்தியமில்லை என்றே அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply