மீன்களில் ரசாயன கலப்பு இல்லை: ஆய்வில் தெரிய வந்துள்ளதாக அமைச்சர் ஜெயகுமார் அறிவிப்பு
கடந்த சில நாட்களாக மீன்களில் ஃபார்மலின் ரசாயன கலப்பு இருப்பதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியானதால் பொதுமக்கள் அச்சம் கொண்டனர். இந்த செய்தியால் மீன் விற்பனை பெருமளவு வீழ்ச்சி அடைந்தது.
இந்த நிலையில் அதிகாரிகளின் ஆய்வில் மீன்களில் ஃபார்மலின் ரசாயன கலப்பு இல்லை என தெரியவந்துள்ளதாகவும், பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என்றும் அமைச்சர் ஜெயகுமார் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
மேலும் மீன்களில் ஃபார்மலின் ரசாயன கலப்பு இருப்பதாக சமூக வலைத்தளங்களில் வீண் வதந்தி பரப்பி மீனவர்களின் வாழ்வாதாரத்தில் விளையாட வேண்டாம் என்றும், மீன்களில் ரசாயனம் கலந்துள்ளதாக சந்தேகம் வந்தால் மீன்வளப் பல்கலை.யில் ஆய்வு செய்யலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.