திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டி இல்லை: கமல்ஹாசன்

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டி இல்லை: கமல்ஹாசன்

உலக நாயகன் கமல்ஹாசன் சமீபத்தில் ‘மக்கள் நீதி மய்யம்’ என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த கட்சிக்கு உறுப்பினர் சேர்க்கும் பணி தமிழகம் முழுவதும் நடந்து வருகிறது.

இந்த நிலையில் கமல்ஹாசன் கட்சி தொடங்கி ஒருசில மாதங்களே ஆகியுள்ளதால் அவர் வரும் திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தலில் வேட்பாளரை நிறுத்துவாரா? என்ற கேள்வி எழுந்தது. இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த கமல்ஹாசன், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் தற்போதைக்கு போட்டியிடும் முடிவு இல்லை என்றும் அதே நேரத்தில் மக்களவை தேர்தலுக்கு மக்கள் நீதி மய்யம் தயாராகிக் கொண்டிருப்பதாகவும், சட்டப்பேரவை இடைத்தேர்தலில் ஆட்சியாளர்களுக்கு பாடம் புகட்ட வேண்டிய வேலையில் ஈடுபடுவோம் என்றும் கூறியுள்ளார்.

கமல்ஹாசனின் இந்த பேட்டியில் இருந்து அவரது கட்சி இரண்டு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடாது என்றே தெரிகிறது. ஆனால் இடைத்தேர்தலில் போட்டியிட்டு தங்கள் பலத்தை நிரூபிக்க வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருவதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.

 

Leave a Reply