ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியில்லை: தேமுதிக

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியில்லை: தேமுதிக

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்.கே.நகர் தொகுதியின் தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதால் அந்த தொகுதியை கைப்பற்ற அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பாகியுள்ளன.

இந்த நிலையில் ஆர்.கே.நகர் தொகுதியில் தேமுதிக போட்டியிடாது என்று அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் சுதீஷ் அறித்துள்ளார். இடைத்தேர்தலில் ஆளும் கட்சியின் ஆதிக்கம் அதிகம் இருக்கும் என்பதாலே இந்த முடிவு என்று அக்கட்சியின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் திமுக, அதிமுக, தினகரன் தரப்பு மற்றும் பாமக ஆகிய கட்சிகள் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply