இந்தியாவிற்கு ஆணுறை விளம்பரம் தேவையில்லை. மத்திய அமைச்சர் பேட்டி

BJP_Harsh_Vardhan_360இந்திய கலாச்சாரத்திற்கு ஆணுறை விளம்பரம் தேவையற்றது. ஒருவனுக்கு ஒருத்தி என்ற ஒழுக்க கட்டுப்பாட்டுடன் வாழ்ந்தால் மட்டுமே எய்ட்ஸ் போன்ற கொடிய பாலியல் நோய்களில் இருந்து மக்கள் தப்பிக்க முடியும். என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் பரபரப்புடன் கூறியுள்ளார்

மத்திய சுகாதாரத்தறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் நேற்று வெளிநாட்டு பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்தபோது, “ஆணுறையை உபயோகியுங்கள் என்று அரசாங்கமே விளம்பரப்படுத்துவது இந்திய கலாச்சாரத்திற்கு முற்றிலும் முரணானது. ஒருவனுக்கு ஒருத்தி என்ற ஒழுக்க கட்டுப்பாட்டுடன் வாழ்ந்தாலே எய்ட்ஸ் நோயை தடுக்கமுடியும். மாறாக தவறான பாலியல் உறவில் ஈடுபடும்போது ஆணுறை உபயோகியுங்கள் என்று அரசாங்கமே கூறுவது, தவறான செயலை ஆதரிப்பது போல் உள்ளது. இது இந்திய கலாசாரத்தை சீரழிக்கும் செயல்.

மேலை நாடுகளில் யார் வேண்டுமானாலும் யாருடனும் உறவு கொள்வார்கள். அவர்களுடைய கலாச்சாரத்தை நாம் பின்பற்றவேண்டியதில்லை.  கணவன்-மனைவி இருவரும் பரஸ்பர நம்பத்தன்மையோடு ஒருவருக்கொருவர் நம்பிக்கையுடன் நடந்து கொண்டால் இயல்பாகவே எய்ட்ஸ் வராமல் தடுத்து விடமுடியும். பின் எதற்கு ஆணுறை” என்று அவர் கூறியுள்ளார்.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சரின் கருத்தை பெரும்பாலானோர் வரவேற்றுள்ளனர். இருப்பினும் ஒருசில தன்னார்வு தொண்டு நிறுவனங்கள் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்

Leave a Reply