சிங்கப்பூரில் கண்டக்டர் இல்லாத பஸ்: இந்தியாவுக்கு எப்போது வரும்?

சிங்கப்பூரில் கண்டக்டர் இல்லாத பஸ்: இந்தியாவுக்கு எப்போது வரும்?

போக்குவரத்து துறையின் நஷ்டத்திற்கு ஊழியர்களின் அதிகப்படியான ஊதியமே முக்கிய காரணம் என்று தமிழகத்தில் கூறப்பட்டு வரும் நிலையில் சிங்கப்பூரில் அங்கு கண்டக்டர்கள் இல்லாமல் பஸ்கள் இயக்கப்படும் தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

சிங்கப்பூரில் பஸ்களில் பயணம் செய்பவர்கள் டிக்கெட் கட்டணத்தை ஏ.டி.எம். கார்டு வடிவில் இருக்கும் அட்டைகள் மூலம் செலுத்துகின்றனர். ஈஸி லிங்க் நிறுவனம் ஏ.டி.எம். வடிவிலான பேருந்து அட்டைகள் வழங்கியுள்ளன.

அதைக் கொண்டு ஒவ்வொரு பஸ் நிலையத்திலும் உள்ள டாப்-அப் எந்திரங்களில் பணத்தை செலுத்தி அட்டையில் சேமித்து கொள்ள வேண்டும். பின்னர் பஸ்சில் ஏறும்போது அங்கு இருக்கும் எந்திரத்தில் இந்த அட்டையை காட்ட வேண்டும். அது நாம் ஏறிய இடத்தை குறித்துக் கொள்ளும்.

பின்னர் நாம் இறங்கும் போது மீண்டும் அட்டையை எந்திரம் முன்பு காண்பிக்க வேண்டும். அப்போது நாம் பயணம் செய்த தூரத்துக்கான கட்டணம் பேருந்து அட்டையில் இருந்து எடுத்துக் கொள்ளப்படும். அட்டையை எந்திரத்தின் முன் காட்டாமல் இறங்கினால் பஸ் கடைசியில் நிற்கும் இடத்துக்கான கட்டணம் வரை கழிக்கப்படும்.

இந்த பஸ் அட்டையை தமது கடன் அட்டையுடன் இணைத்து கொள்ளலாம். அதன்மூலம் பஸ் அட்டையில் பணம் தீர்ந்தவுடன் கடன் அட்டையில் இருந்து மீண்டும் பணம் ரீசார்ஜ் ஆகிவிடும்.

இந்த அட்டையை கொண்டு மெட்ரோ ரெயிலிலும் பயணம் செய்யலாம். கடையில் பொருட்கள் வாங்கவும், உணவகங்களில் பணம் செலுத்தலாம் இதை பயன்படுத்தி கொள்ளலாம். இந்த வசதி சிங்கப்பூரில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அமலில் உள்ளது.

Leave a Reply