சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம். திமுக அதிரடியால் பரபரப்பு
தமிழக சட்டமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கவிருப்பதால் நேற்றிரவு சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்.எல்.ஏக்களின் ஆலோசனை கூட்டம் செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கூடியது. இந்த கூட்டத்தில் சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சமீபத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரியபோது சபாநாயகர் ரகசிய வாக்கெடுப்புக்கு அனுமதிக்காமல் ஒருதலைப்பட்சமாக நடந்து கொண்டதால் இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படுவதாக திமுக தரப்பில் இருந்து கூறப்படுகிறது.
பட்ஜெட் தொடரின்போது அதிக எம்.எல்.ஏக்களை வைத்துள்ள ஒரு எதிர்க்கட்சி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால் சட்டசபையில் கடும் அமளி ஏற்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்த நாள் போல் இன்றும் சட்டைகள் கிழிக்கப்படுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்