ஜெ.வழக்கில் மேல்முறையீடா? கர்நாடக அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு என்ன?

jayalalithaதமிழக முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கில் மேல்முறையீடு செய்வது குறித்து முடிவெடுக்க நேற்று மாலை கர்நாடக மந்திரிசபை கூடியது. இந்த கூட்டத்தில் இதுகுறித்து எவ்வித முடிவும் எடுக்கவில்லை என கூட்டத்திற்கு பின்னர் பேட்டியளித்த கர்நாடக சட்ட மந்திரி ஜெயசந்திரா கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் மேல்முறையீடு செய்வது தொடர்பாக அட்வகேட் ஜெனரல், அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞர் ஆகியோரிடம் சில விளக்கங்களை கேட்டிருந்தேன். அட்வகேட் ஜெனரல் வெளியூர் சென்றிருப்பதால் அந்த விளக்கங்களை அளிக்க அவரால் இயலவில்லை. எனவே, இன்றைய கூட்டத்தின்போது ஜெயலலிதா விவகாரம் தொடர்பாக விவாதிக்கப்படவில்லை’ என்று கூறினார்.

அப்படியானால், அடுத்த மந்திரிசபை கூட்டத்தின்போது இந்த விவகாரம் பற்றி விவாதிக்கப்படுமா? என்ற நிருபரின் கேள்விக்கு பதில் அளித்த அவர், ‘அட்வகேட் ஜெனரல் பெங்களூரில் இல்லை. அவர் வரட்டும்’ அதன் பின்னர் பார்க்கலாம்’ என்று கூறிவிட்டு சென்றுவிட்டார். இதனால் ஜெயலலிதாவின் வழக்கு கர்நாட அரசால் மேல்முறையீடு செய்யப்படமாட்டாது என்றே தெரிகிறது. ஆனால்  இந்த வழக்கில் மேல் முறையீடு செய்ய வேண்டும் என்று அட்வகேட் ஜெனரல் ரவிவர்மா குமார் மற்றும் அரசு சிறப்பு வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யா ஆகியோர் கர்நாடக அரசுக்கு அறிவுறுத்தியிருந்தனர் என்பது, குறிப்பிடத்தக்கது.

Leave a Reply