இந்தியா-பாகிஸ்தான் போட்டி நடத்தும் வாய்ப்பு மங்கிவிட்டது. ஷகாரியார்கான் ஏமாற்றம்

இந்தியா-பாகிஸ்தான் போட்டி நடத்தும் வாய்ப்பு மங்கிவிட்டது. ஷகாரியார்கான் ஏமாற்றம்
india vs pak
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடைபெற வாய்ப்புள்ளதாகவும், இந்த தொடருக்கு மத்திய அரசு அனுமதி அளித்தால் இம்மாத இறுதியில் போட்டிகள் நடைபெறும் என இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கடந்த சில நாட்களாக வெளிவந்த நிலையில், மத்திய அரசு இதுகுறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை.

சமீபத்தில் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இது குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் எவ்வித அறிவிப்பையும் வெளியிடததால் விரக்தி அடைந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தலைவர் ஷகாரியார்கான், இந்தியா-பாகிஸ்தான் தொடரை நடத்துவதற்கான நம்பிக்கை தகர்ந்து போய் விட்டதாக அறிவித்துள்ளார்.

நேற்று பாகிஸ்தானில் செய்தியாளர்களிடம் பேசிய ஷகாரியார்கான், ‘இறுதியாக இன்னும் ஒன்று அல்லது 2 நாட்கள் மட்டுமே காத்திருப்போம். அதன் பிறகும் இந்திய அரசிடம் அனுமதி கிடைக்காவிட்டால், இந்த தொடரை கைவிட்டு விடுவோம். உண்மையை சொல்ல வேண்டும் என்றால் இந்தியா- பாகிஸ்தான் தொடர் நடத்தப்படுவதற்கான வாய்ப்பு இப்போது மிகவும் மங்கி போய் விட்டது. ஏனெனில் சுஷ்மா சுவராஜ்-பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் இடையிலான பேச்சுவார்த்தையின் போது கிரிக்கெட் குறித்து எதுவும் ஆலோசிக்கப்படவில்லை என்று எங்களிடம் தெரிவிக்கப்பட்டது. இதனால் மிகுந்த ஏமாற்றத்திற்கு உள்ளானோம்.

இலங்கையில், இந்தியா- பாகிஸ்தான் தொடரை நடத்துவதற்காக ஓட்டல் அறைகளை முன்பதிவு செய்வது உள்ளிட்ட ஏற்பாடுகளை நாங்கள் ஏற்கனவே தொடங்கி இருந்தோம். இந்த தொடர் ரத்தானால் எங்களுக்கு சுமார் ரூ.266 கோடி முதல் ரூ.332 கோடி வரை இழப்பு ஏற்படும். என்றாலும் பொருளாதார ரீதியாக எங்களுக்கு மிகப்பெரிய பின்னடைவாக இருக்காது’ என்று கூறியுள்ளார்.

English Summary: No decision yet on India-Pakistan series

Leave a Reply