ரஷ்யா மீது பொருளாதார தடையா? ஐரோப்பிய யூனியன் அதிரடி முடிவு

ரஷ்யா மீது பொருளாதார தடையா? ஐரோப்பிய யூனியன் அதிரடி முடிவு

putinபோர் நிறுத்த விதிமுறைகளை ரஷ்யா தொடர்ச்சியாக மீறி சிரியா கிளர்ச்சியாளர்களின் முகாம்கள் மீது குண்டுமழை பொழிந்துவருவதால் ரஷ்யா மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று ஐரோப்பிய யூனியன் கடந்த சில நாட்களுக்கு முன் எச்சரிக்கை விடுத்திருந்தது. ஆனால் நேற்று மீண்டும் சிரியாவில் உள்ள அலெப்போ நகரில் ரஷ்ய விமானப்படை விமானங்கள் கடும் தாக்குதல் நடத்தியுள்ளது.

எனவே ரஷ்யா மீது கடுமையான பொருளாதார தடைகளை விதிக்க வேண்டும் என பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் கருத்து கூறியுள்ள போதிலும், தற்போதைக்கு ரஷ்யா மீது பொருளாதார தடை விதிக்கும் முடிவை செயல்படுத்தும் எண்ணம் இல்லை என ஐரோப்பிய யூனியன் அறிவித்துள்ளது.

ஆனால் அதே நேரத்தில் ஐரோப்பிய யூனியன் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது ரஷ்யாவின் செயல்பாடுகளில் இருந்தே தீர்மானிக்கப்படும் என்றும், இத்தாலி பிரதமர் ரென்சி குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply