உயிருள்ள பெண் தேவையில்லை! அழகான பொம்மை போதும். ஜப்பான் ஆண்களின் விபரீத முடிவு
ஜப்பானில் உள்ள பெரும்பாலான ஆண்கள் இளம்பெண்களை காதலிப்பதை விட சிலிக்கான் பெண் பொம்மையை காதலிப்பதை ஒரு கலாச்சாரமாகவே உருவாக்கி வருகின்றனர். இதனால் ஆண்-பெண் உறவு, குடும்பம், குழந்தைகள் என்ற கலாச்சாரமே விரைவில் முடிவுக்கு வரும் அபாயம் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.
உயிருள்ள பெண்ணை காதலித்தால் அவர் நம்மை எதிர்த்து பேசுவார், செலவு வைப்பார் என்பதற்காகவும், சிரித்த முகம், அமைதியான சுபாவம், எப்போதும் இளமை என்ற ரூபத்தில் இருக்கும் பொம்மைகளை காதலிக்கும் ஆண்கள் ஜப்பானில் அதிகரித்து வருகின்றனர்.
மேலும் ஜப்பானிய ஆண்கள். மன அழுத்தத்தாலும், வேலை பளுவால் காதலிக்க நேரமில்லாமல் வயதை கடந்த பெரும்பாலும் ஆண்கள் இந்த சிலிக்கான் பொம்மையை காதலியாக தேர்ந்தெடுத்து வாழத்தொடங்கியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
ஆரம்ப கட்டத்தில் மறைமுகமாக பொம்மை காதலிகளுடன் வாழ்ந்து வந்த ஜப்பானிய ஆண்கள், தற்போது வெளியிடங்களில் கூட தங்களின் சிலிக்கான் காதலியை உடன் அழைத்து செல்கின்றனர்.
தாழ்வு மனப்பான்மை, அதீத மனஅழுத்தம், ஏமாற்றப்படுவோம் என்ற பயம், வயது அதிகரித்தல் உள்ளிட்ட சில பிரச்சனைகளால் பாதிக்கப்படும் ஆண்கள் இவ்வாறு சிலிக்கான் காதலியை தேர்ந்தெடுத்து தங்களின் கனவு வாழ்க்கையை வாழத்தொடங்கிவிடுவதாகவும் மனோதத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போது இந்த சிலிக்கான் காதலியை இளம்வயதுள்ள ஆண்களும் விரும்பத்தொடங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது