நோயாளிகளுக்கு தரப்படும் உணவுக்கு ஜிஎஸ்டி இல்லை: மத்திய அரசு அறிவிப்பு
மருத்துவமனைகளில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவுகளுக்கு ஜிஎஸ்டி கிடையாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு ஒரே நாடு ஒரே வரி என்று அறிமுகம் செய்யப்பட்ட ஜிஎஸ்டி வரி, பல்வேறு பொருட்களுக்கு குறைக்கப்பட்டும், ரத்து செய்யப்பட்டும் வரும் நிலையில் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் உணவுகளுக்கு ஜிஎஸ்டி தேவையில்லை என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த அறிவிப்பு பொதுமக்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய வகையில் உள்ளது. ஏற்கனவே மருத்துவ கட்டணம், மெடிக்கல் செலவுகளுக்கு ஜிஎஸ்டி கட்டி வரும் நோயாளிகளுக்கு உணவில் மட்டும் விலக்கு அளித்துள்ளது ஒரு சிறு ஆறுதல் ஆகும்