விராத் கோஹ்லியை சீண்டும் எண்ணம் இல்லை. டேவிட் வார்னர்
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்து நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த போட்டியின்போது விராத்கோஹ்லியை வெறுப்பேற்றும் வகையில் ஸ்லெட்ஜிங் செய்யும் எண்ணம் இல்லை என்று ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்மித் கூறியுள்ளார். ஒருவேளை அவரை சீண்டினால் அவர் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்பதை நாங்கள் புரிந்து வைத்துள்ளோம் என்றும் அவர் கூறினார்.
டேவிட் வார்னர் மேலும் கூறுகையில், ‘‘எங்களுடைய எண்ணம் எல்லாம், ஆடுகளத்தில் களமிறங்கி, எங்களுடைய சிறந்த பிராண்ட் ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பதுதான். இந்திய அணியில் இடம்பிடித்துள்ள வீரர்களில் விராட் கோலியும் ஒருவர். அவ்வளவுதான். அவரை சீண்டினால் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவார். அதற்கும்மேலும் அதிக அளவில் ஸ்லெட்ஜிங் செய்தால் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்துவார். தற்போதைய சூழ்நிலையில் அவர் உலகத்தரம் வாய்ந்த வீரர். அதேவேளையில் நாங்கள் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும்.
ஸ்லெட்ஜிங் மற்றும் வெறுப்பேற்றும் நோக்கத்துடன் வெறும்பொழுது போக்ககு எண்ணத்துடன் நாங்கள் களம் இறங்கபோவதில்லை. அது சிறந்த கிரிக்கெட் விளையாட்டு, சிறந்த பிராண்ட் கிரிக்கெட்டை வெளிக்கொண்டு வருவதுடன், கிரிக்கெட்டிற்கான மெய்கருத்தையும் நிச்சயமாக உருவாக்கும் வகையில் விளையாடுவோம்’’ என்று கூறியுள்ளார்.