இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை கிடைக்குமா? மத்திய அமைச்சர் பதில்

Muralidar rao BJP(5)இலங்கையில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டுவிட்டதால் அங்கு சகஜநிலை திரும்பியதாக கூறப்படுகிறது. எனவே தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் மீண்டும் அவர்களுடைய சொந்த நாட்டிற்கே திருப்பி அனுப்பப்படுவார்கள் என்ற கருத்து பரவி வரும் நிலையில் மத்திய அமைச்சர் ஒருவர் எந்த காரணத்தை முன்னிட்டும் இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட மாட்டாது என திட்டவட்டமாக கூறியுள்ளார்.

பா.ஜ.க.வின் தேசிய பொதுச்செயலாளர் முரளிதர ராவ் நேற்று வேலூரில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது நிருபர் ஒருவர் கேட்ட கேள்வி ஒன்ருக்கு பதிலளித்த முரளிதர ராவ், ”எந்த காரணத்தைக் கொண்டும், இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட மாட்டாது என்றும் ஆனால் அதேநேரத்தில், இந்திய-இலங்கை பிரச்னை, தமிழக மீனவர் பிரச்னைகள் ஆகியவை விரைவில் தீர்க்க மத்திய அரசு ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்கும் என்றும் கூறினார்.

Leave a Reply