இரட்டை இலை சின்னம் முடக்கம். தேர்தல் ஆணையம் உத்தரவால் இரு அணிகளும் அதிர்ச்சி

இரட்டை இலை சின்னம் முடக்கம். தேர்தல் ஆணையம் உத்தரவால் இரு அணிகளும் அதிர்ச்சி

எம்.ஜிஆரின் இரட்டை இலை சின்னம் யாருக்கு கிடைக்கும் என்ற சஸ்பென்ஸ் உடைந்துவிட்டது. இரு அணிகளுக்கும் இரட்டை இல்லை சின்னம்  இல்லை என இந்திய தேர்தல் ஆணையம் அதிரடியாக அறிவித்துள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவு காரணமாக அவர் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஆர்கே நகர் தொகுதியில் வரும் ஏப்ரல் 12ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் அதிமுக சார்பில் சசிகலா அணி, முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் அணி என்று இரு அணிகள் போட்டியிடுகின்றன. இந்நிலையில், அதிமுக சின்னமான இரட்டை இலையை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என இரு அணிகளும் தலைமை தேர்தல் ஆணையத்தில் மனு அளித்து இருந்தனர்.

இரு அணி தரப்பிலும் தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி மற்றும் தேர்தல் கமிஷனர்கள் ஜோதி, ரவாக் ஆகிய 3 பேர் பெஞ்ச் முன்பு ஆஜராகி விளக்கம் அளித்தனர். பல மணி நேர விசாரணைக்கு பிறகு இரட்டை இலை சின்னத்தை, எந்த அணிக்கும் அளிக்காமல் முடக்கிவிடுவதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதுமட்டுமின்றி இரு அணிகளும் அதிமுக கட்சி என்ற பெயரை பயன்படுத்டஹ் கூடாது என்றும் இந்த இடைத்தேர்தலை பொருத்தவரையில் இரு அணி வேட்பாளர்களும் சுயேட்சை வேட்பாளர்களே என்றும் அதிரடியாக அறிவித்துள்ளது

Leave a Reply