எதிர்க்கட்சி தலைவர் பதவி காலி. விளக்கம் தர மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு.

Sumitra_Mahajan_in_Parliament_360நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சி பதவிக்கு எந்த கட்சியும் தகுதி பெறாததால், அந்த பதவியை காலியாக வைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த முடிவு கவலை அளிப்பதாக உள்ளது என்று கருத்து தெரிவித்துள்ள சுப்ரீம் கோர்ட், இதுகுறித்து மத்திய அரசு விளக்கம் தரவேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

545 உறுப்பினர்கள் கொண்ட மக்களவையின் எதிர்க்கட்சி தகுதியை பெற குறைந்தது 55 எம்.பிக்கள் தேவை. ஆனால் காங்கிரஸ் உள்பட எந்த கட்சியும் இந்த எண்ணிக்கையை கொண்ட எம்.பிக்களை கடந்த தேர்தலில் பெறவில்லை. காங்கிரஸ் 44 எம்.பிக்களையும், அதிமுக 37 எம்.பிக்களையும் கைவசம் வைத்துள்ளது. போதுமான எம்.பிக்கள் இல்லாத காரணத்தால் எந்த கட்சிக்கும் எதிர்க்கட்சி பதவி வாங்க முடியாது என்றும் அந்த பதவி காலியாக இருப்பதாக அறிவிக்கப்படுவதாகவும் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் திட்டவட்டமாக கூறிவிட்டார்.

இதுகுறித்து தொடரப்பட்ட ஒரு வழக்கின் விசாரணை நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நடந்தது. எதிர்க்கட்சி விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த நீதிபதிகள், “லோக்பால் சட்டத்தின்படி எதிர்க்கட்சித் தலைவர் என்ற பதவி மிகவும் முக்கியமான ஒன்றாகும் என்றும், மத்திய அரசு முன் வைக்கும் விவகாரங்களில் உள்ள எதிர்மறையான விஷயங்களை எடுத்துரைத்து, அதற்காக குரல் கொடுப்பதே எதிர்க்கட்சித் தலைவரின் முக்கியப் பணியாகும் என்று கூறியுள்ளது.

எனவே எதிர்க்கட்சித் தலைவர் பதவி விவகாரம் குறித்து மத்திய அரசு உடனடியாக முடிவெடுக்க வேண்டும் என்றும் அதனை காலியாக வைத்திருக்க முடியாது என்று கூறிய நீதிபதிகள் எதிர்க்கட்சித் தலைவர் என்ற வார்த்தைக்கு உரிய விளக்கத்தை 4 வார காலத்திற்குள் அளிக்க வேண்டும்”  என  உத்தரவிட்டனர்.

Leave a Reply