செங்கல்பட்டு தியேட்டர்களுக்கு இனிமேல் படமே கிடையாதாம். தயாரிப்பாளர் சங்கம் அதிரடி
இளையதளபதி விஜய் நடித்த ‘தெறி’ படத்தை திரையிட மறுப்பு தெரிவித்த செங்கல்பட்டு திரையரங்குகள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக நேற்று மாலை சென்னையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஒருசில அதிரடி முடிவுகள் எடுக்கப்பட்டன. இந்த கூட்டத்திற்கு பின்னர் தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்ட அறிக்கையின் முழுவிபரங்கள் இதோ:
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் இன்று 20.04.2016 நடைபெற்ற அவசர ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை 21.04.2016 முதல் தெறி திரைப்படத்தினை திரையிட்ட கிழ்க்கண்ட திரையரங்குகளை தவிர மற்ற எந்த திரையரங்குகளுக்கும் ஒத்துழைப்பு அளிப்பதில்லை என்றும் மேலும் புதியதாக எந்தத் திரைப்படமும் திரையிடுவதில்லை என்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
1. ஏ.ஜி.எஸ். குழுமம் (வில்லிவாக்கம் மற்றும் OMR)
2. மாயாஜால் – கானத்தூர்
3. Jazz Cinemas – வேளச்சேரி
4. Fame National – விருகம்பாக்கம்
5. PVR Cinemas – வேளச்சேரி
6. S2 தியாகராஜா – திருவான்மியூர்
7. S2 -பெரம்பூர்
8. கணபதிராம் – அடையார்
9. மீரா – திருவள்ளூர்
10. வெற்றிவேல் முருகன் – பொன்னேரி
11. எஸ்.எஸ்.ஆர். பங்கஜம் – சால்கிராமம்
மேற்கூறப்பட்ட திரையரங்குகளுக்கு மட்டும் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முழு ஒத்துழைப்பை வழங்கும் என்றும் ஒட்டுமொத்த தயாரிப்பாளர்களின் சார்பாக ஏகமனதுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.