அசல் உரிமை வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை: சென்னை ஐகோர்ட்
வாகனங்கள் ஓட்டுபவர்கள் இன்று முதல் அசல் ஓட்டுனர் உரிமையை கையில் வைத்திருக்க வேண்டும் என்ற புதிய சட்டம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
இந்த நிலையில் இதனை எதிர்த்து வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. தமிழ்நாடு லாரி உரிமையாளர் சம்மேளன் தாக்கல் செய்த இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது கருத்து தெரிவித்த நீதிபதி துரைசாமி, ‘ஓட்டுநர்கள் அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்கவேண்டிய கட்டாயம் இல்லை என்று கருத்து தெரிவித்ததோடு, திடீரென்று இப்படி ஒரு முடிவு ஏன் எடுக்கப்பட்டது என்று தமிழக அரசிடம் விளக்கம் கேட்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
இதனால் வாகன ஓட்டிகள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.